நாட்டையை உலுக்கிய, நிதாரி கிராம கொலை வழக்குகள். சிறுமிகள், இளம்பெண்களை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து துண்டுதுண்டாக வெட்டி கொன்ற சைக்கோ கில்லர். தொழிலதிபரின் வீட்டின் பின்புற கால்வாயில் இருந்து கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மற்றும் மண்டை ஓடுகள். 20 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கு. தற்போது சைக்கோ கில்லருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு என்ன? 2006... உத்தரபிரதேச மாநிலம், நிதாரி கிராமத்துல உள்ள ஒரு தொழிலதிபரோட வீட்டு பின்னாடி இருக்குற சாக்கடையில இருந்து தெரு நாய் ஒண்ணு, ஏதோ ஒரு பொருள கவ்வி ரோட்டுக்கு இழுத்துட்டு வந்துருக்கு. இந்த நாய்களோட ஒரே தொல்லையா போச்சு, சாக்கடையில உள்ளத ரோட்டுல இழுத்துட்டு வந்து போட்டுட்டே இருக்கு, இதுக்கு ஒரு முடிவு கட்டணும்னு சொல்லி முணுமுணுத்துக்கிட்டே நடந்து போய்ட்டு இருந்துருக்காங்க அந்த ஏரியா மக்கள். சாதாரணமா நடந்து போய்ட்டு இருந்த ஒருத்தரு, நாய் கவ்விட்டு வந்த பொருள உத்து பாத்துருக்காரு. அப்பதான் தெரிஞ்சிருக்கு, அது ஏதோ ஒரு பொருள் இல்ல. யாரோ பெண்ணோட மண்டை ஓடுன்னு. மனித மண்டையோட நாய் கவ்விட்டு வந்தத பாத்து அங்க இருந்தவங்க அரண்டு போய்ட்டாங்க. தகவல் தெரிஞ்சு சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ், தனியா கிடந்த மனித ஓடை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வச்சுட்டு விசாரணையில இறங்குனாங்க.தெரு நாய் மண்டை ஓடை கவ்வி எடுத்து வந்த சாக்கடைல சோதனை பண்ணாங்க. அப்ப, ஒன்னு இல்ல ரெண்டு இல்ல தோண்ட தோண்ட கிட்டத்தட்ட ஏகப்பட்ட பெண்களோட எலும்பு கூடுகளும், மண்டையோடுகளும் இருந்தத பாத்து அந்த ஏரியா மக்கள் மட்டும் இல்ல போலீஸும் ஒரு நிமிஷம் கதிகலங்கி போய்ட்டாங்க. அதுக்குப்பிறகு, அந்த எலும்பு கூடுகளையும், மண்டையோடுகளையும் கைப்பற்றுன போலீஸ், எல்லாத்தையும் பரிசோதனைக்கு அனுப்பியிருக்காங்க. அப்ப தான், போலீஸுக்கு கிடச்ச எல்லா எலும்பு கூடுகளும், மண்டையோடுகளும் 15 வயசு சிறுமிகள் தொடங்கி 28 வயசு இளம்பெண்களுடையதுன்னு தெரியவந்து அதிர வச்சுச்சு அதுமட்டுமில்லாம, அந்த பங்களாவ சுத்தியிருக்குற இடத்தையும் தோண்டி பாத்தப்பா, பலரையும் ஷாக்காக வைக்கிற மாதிரி சில பெண்களோட அழுகிய சடலங்களும் கிடைச்சது. இது எல்லாத்தையும் வச்சு பாத்த போலீஸ்காரங்களுக்கு பல சந்தேகங்க எழுந்துச்சு. சிறுமிகளையும், இளம்பெண்களையும் கொலை செஞ்சு உடல் பாகங்கள துண்டு துண்டா வெட்டி கால்வாயில வீசுனது யாருங்குற கேள்வி எழவே, அந்த பங்களா யாருடையது? அந்த பங்களாவுல யாரு இருக்காங்கன்னு விசாரிக்க ஆரம்பிச்சாங்க. அப்ப, அந்த பங்களா, தொழிலதிபர் மொனீந்தர் சிங்-ங்குறவரோடதுன்னு தெரிய வந்துச்ச. உடனே, அங்க போன காவலர்கள், பங்களாவோட உரிமையாளர் மொனீந்தர் சிங்-கிட்ட விசாரணை பண்ணாங்க. போலீஸ்காரங்கள பாத்ததும் பதட்டமான மொனீந்தர் சிங் காவலர்களோட கேள்விகளுக்கு ஒழுங்கா பதிலளிக்காம உளறிருக்காரு. அத கவனிச்ச போலீஸ்காரங்களோ, பெண்களோட எலும்கூடுகள கைப்பற்றுனத பத்தி துருவிதுருவி விசாரணை நடத்துனதுல, காவலர்களையே உறைய வைக்கிற மாதிரி பல விஷயங்கள வெளிச்சத்துக்கு வந்துச்சு. நிதாரி கிராமத்துல உள்ள பங்களாவுல, மொனீந்தர் சிங்கும், வீட்டு வேலைக்காரன் சுரேந்திர கோலி மட்டும்தான் வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. வேலைக்காரரான சுரேந்திர கோலியும், உரிமையாளர் மொனீந்தர் சிங்கும் நொய்டாவுல உள்ள 31வது செக்டார் குடிசைப் பகுதியில இருந்த ஏழை குடும்பங்கள சேந்த சிறுமிகளையும், இளம்பெண்களையும் கடத்திட்டு வந்து அவங்கள கொடூரமான முறையில பாலியல் வன்கொடுமை பண்ணது மட்டுமில்லாம, சித்ரவதை செஞ்சு துடிக்கதுடிக்க கொன்னுட்டு, பங்களாவ சுத்தியுள்ள கால்வாயில உடல் பாகங்கள வீசிருக்காங்க. இதுல உச்சக்கட்ட கொடூரமான விஷயம் என்னனா, 16 சிறுமிகள கடத்திட்டு வந்த கொலை செஞ்சி, சடலத்தோட உடலுறவு பண்ணிருக்கான் பாலியல் சைக்கோ சுரேந்திர கோலி. அதுமட்டுமில்லாம, சிறுமிகளோட உடல் உறுப்புகள தனியா எடுத்து அத சுரேந்திர கோலி சாப்பிட்டதாவும் விசாரணையில தெரியவந்துச்சு. அதுக்கப்புறம், மொனீந்தர் சிங் மேல ஆறு வழக்குகளும், சுரேந்திர கோலி மேல 13 வழக்குகளும் பதிவு செஞ்ச போலீஸ், ரெண்டு பேரையும் அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சாங்க. காஸியாபாத் சிபிஐ நீதிமன்றத்துல நடந்து வந்த இந்த கேஸ் 2007-ல விசாரணைக்கு வந்துச்சு. அப்ப, கொலையாளிகளான மொனீந்தர் சிங்குக்கும், சுரேந்தர கோலிக்கும் மரண தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்டுச்சு. அதுக்குப்பிறகு, மொனீந்தர் சிங் மேல்முறையீடு பண்ண வழக்கு, 2023-ல அலகாபாத் உயர்நீதிமன்றத்துல விசாரணைக்கு வந்தப்ப, மொனீந்தர் சிங், சுரேந்திர கோலி மேல உள்ள குற்றச்சாட்டுகள நிரூபிக்க போதுமான எவிடன்ஸ் இல்லன்னு சொல்லப்பட்டுச்சு. அதனால, இந்த வழக்கு சம்பந்தமா சிபிஐ மற்றும் அரசு மேல்முறையீட்டு மனுக்கள தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு தள்ளுபடி பண்ணுச்சு. இதனால மொனீந்தர் சிங் ஆறு வழக்குகளையும் இருந்து முழுமையா விடுவிக்கப்பட்டாரு. சுரேந்திரகோலி மேல ஏற்கனவே ஒரு பாலியல் வழக்கு இருந்ததால அவன விடுவிக்கல. இந்த சூழல, 20 வருஷத்துக்கு அப்புறம் உச்ச நீதிமன்றத்துக்கு வந்த இந்த கேஸ்ல, குற்றவாளி சுரேந்திர கோலிய விடுதலை செஞ்சு உத்தரவிட்டுருக்கு. சுரேந்திர கோலி, குற்றவாளின்னு நிரூபிக்க சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், பிற வழக்குகள்ல நம்பகத்தன்மையற்றதுன்னு நிரூபிக்கப்பட்டதால அந்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செஞ்சிருக்கு. கடைசியா வந்த கேஸ்லையும் சுரேந்திர கோலி விடுவிக்கப்பட்டதால் பல பெண்கள கடத்தி பாலியல் வன்கொடுமை செஞ்ச சுரேந்தர் கோலி, கூடிய சீக்கிரம் சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்பு இருக்குறதா காவல்துறை வட்டாரத்துல சொல்லப்படுது. இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | ஈரோட்டில் கடத்தப்பட்ட குழந்தை நாமக்கல்லில் பத்திரமாக மீட்பு 25 நாட்கள்|Erode