பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் என்ஐஏ இயக்குநர் சதானந்த் நேரில் ஆய்வு செய்தார். அங்கு உள்ளூர் மக்கள் மற்றும் தாக்குதல் சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் அவர் விசாரணை மேற்கொண்டார். அவருடன் காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.