குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவரை நேரில் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்தார். கோவாவில் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிவிட்டு டெல்லி சென்ற பிரதமர், குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து மலர் கொத்து கொடுத்து தீபாவளி வாழ்த்து கூறினார். இதைப்போல குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனையும் சந்தித்து பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்துகளை கூறினார்.