நேற்று கடும் சரிவுடன் வர்த்தகத்தை முடித்துக் கொண்ட இந்திய பங்குசந்தைகள் இன்று ஒரு சிறிய ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கின. நேற்று 1,200 க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்த நிலையில், இன்று மும்பை பங்குசந்தை குறியீடான சென்செக்ஸ் 348 புள்ளிகள் உயர்ந்து 84 ஆயிரத்து 674 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. இதே போன்று தேசிய பங்குசந்தை குறியீடான நிப்டி, 96 புள்ளிகள் அதிகரித்து 25 ஆயிரத்து 907 புள்ளிகளில் வர்த்தகத்தை துவக்கியது. டெக் நிறுவனங்கள்,கட்டுமான நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றின் பங்குகள் விலை உயர்ந்தன. நேற்று அமெரிக்க பங்குசந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்த தால் அதன் தாக்கல் இந்திய பங்குசந்தைகளில் பிரதிபலித்துள்ளதாக கூறப்படுகிறது.