Also Watch
Read this
By: Web Team

SIR திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் போராட்டம் நடத்திய போது, ”124 NOT OUT” என்ற டி-ஷர்ட் அணிந்திருந்த நிலையில் அது பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
பீகாரில் வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கைக்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில், 124 வயதான ”மிந்தா தேவி” என்பவர் முதல் முறையாக வாக்களிக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்த நிலையில், தேர்தல் முறைகேடுக்கு இதுவே சிறந்த உதாரணம் என்பதை வெளிப்படுத்தும் விதமாக பெண்ணின் முகம் மற்றும் அவரின் வயது பொறிக்கப்பட்ட டி-ஷர்ட் அணிந்து போராட்டம் நடத்தியதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved