தீபாவளி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளதால் கோலாலம்பூர் ஆசியான் உச்சி மாநாட்டுக்கு தம்மால் வர இயலாது என பிரதமர் மோடி தம்மிடம் தெரிவித்ததாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் இதை தெரிவித்துள்ள அவர், கடந்த இரவு மோடியுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அப்போது இந்திய-மலேசிய உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து விவாதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மலேசியாவின் மிக முக்கிய கூட்டாளியாக இந்தியா இருக்கிறது என தெரிவித்துள்ள அவர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி காணொலியில் பங்கேற்பதாக தம்மிடம் தெரிவித்ததாகவும் பதிவிட்டுள்ளார்.