Also Watch
Read this
By: Manigandan Raja

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வாளையாரில் காவல்துறையினர்,மற்றும் வணிக வரித்துறை சோதனைச் சாவடிகள் உள்ளன. இந்த வழியாக போதைப்பொருள் மற்றும் தடை
செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்க கேரளா போலீசார் மற்றும் கலால் வரி துறையினர் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் வாளையார் காவல் ஆய்வாளர் ராஜீவ், உதவிய ஆய்வாளர் பிரமோத் மற்றும் காவல்துறையினர் வாகன சோதனை மேற்கொண்டனர்.அப்பொழுது சேலத்தில் இருந்து கொச்சி நோக்கி வந்த சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் காரின் பின்புற இருக்கைக்கு அடியில் கட்டு, கட்டாக பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து காரில் வந்த தம்பதியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அந்தப் பணத்திற்கான உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரிய வந்தது.விசாரணையில் அவர்கள்
மராட்டிய மாநிலம் புனேவைச் சேர்ந்த சவான் ரூபேஷ், அவரது மனைவி அர்ச்சனா ஆகியோர் என்பதும் சேலத்தில் வசித்து வரும் அவர்கள் அங்கு இருந்து கொச்சிக்கு ஹவாலா பணத்தை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
காரில் கடத்தப்பட்ட பணத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று காவல் துறையினர் எண்ணிய போது அதில் ரூபாய் ஒரு கோடியே 18 லட்சம் இருந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தம்பதியை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து அந்த பணத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து அந்த பணம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என்பது தொடர்பாக வருமானவரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள் : அசாமில் இளைஞர் மரணத்திற்கு நீதி கேட்டு போராட்டம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved