மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரே பஹல்காம் தாக்குதலையும் அரங்கேற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு ஹஃபிஸ் சையீத் தான் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கான ராணுவப் பாதுகாப்பை பாகிஸ்தான் அதிகரித்துள்ளதாகவும் கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சிகர தகவல் வெளியாகி உள்ளது.