பிரதமர் மோடியை திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி சந்தித்து பேசியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவை வெளியிட்டுள்ள அவர், தூத்துக்குடி தொகுதியில் உள்ள பிரச்னைகள் மற்றும் தூத்துக்குடி துறைமுகத்தில் நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும் விவரித்ததாக தெரிவித்துள்ளார். மேலும், தூத்துக்குடி விமான நிலையத்தில் புதிய முனையம் அமைப்பதற்கு உறுதுணையாக இருந்ததற்கு நன்றியும் தெரிவித்ததாக கனிமொழி குறிப்பிட்டுள்ளார்.