டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி தணித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கினைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கெஜ்ரிவால், டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம்ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிடாது என்று கூறினார்.