பெங்களூருவில் மணப்பெண் தேடித்தராத தில்மில் என்கிற மேட்ரிமோனிக்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விஜயகுமார் என்பவர் கடந்த மார்ச் மாதம் தனது மகனுக்காக மேட்ரிமோனியில் 30 ஆயிரம் ரூபாய் கட்டி பதிவு செய்துள்ளார். 45 நாட்களில் பெண் தேடி தருவதாக உறுதியளித்து விட்டு, நாட்கள் கடந்த பின்னும் முறையாக பதில் அளிக்காததால் நீதிமன்றத்தில் முறையிட்டார்.