காங்கிரஸ் மிகவும் ஊழல் மலிந்த கட்சி என்றும் துக்கடா குழுக்களாலும், அர்பன் நக்சல்களாலும் அந்த கட்சி இயக்கப்படுவதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார். பிஎம் விஸ்வகர்மா திட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலம் வார்தாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி இவ்வாறு கூறினார். இப்போதுள்ள காங்கிரசுக்கும் மகாத்மா காந்திக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்றார் மோடி.