எட்டாவது ஊதிய குழுவை அமைத்து பரிந்துரைகளை பெற மத்திய கேபினட் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு பகுதி நேர உறுப்பினரும், ஒரு உறுப்பினர் செயலரும் இருப்பார்கள் என கேபினட் கமிட்டியில் வழங்கப்பட்ட ஒப்புதலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.2016 ல் அமலுக்கு வந்த ஏழாவது ஊதியக் குழுவுக்கு பதிலாக எட்டாவது ஊதிய குழுவை அமைக்க கடந்த ஜனவரியில் மத்திய கேபினட் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கியது. தற்போது அதற்கு வடிவம் அளிக்கப்பட்டு, 18 மாதங்களில் தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. எட்டாவது ஊதிய குழுவின் இடைக்கால அறிக்கை கிடைத்த பின்னர் அதன் பரிந்துரைகளை அமல்படுத்தும் தேதி பற்றி அறிவிக்கப்படும் . ஊதிய குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வந்தால் மத்திய அரசு பணியாளர்கள் சுமார் 50 லட்சம் பேர்,ஓய்வூதியர்கள் 69 லட்சம் பேர் என ஒரு கோடிக்கும் அதிகமானோர் பலன் பெறுவர்.