மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 150-க்கும் அதிகமான இடங்களில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா 80 முதல் 85 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 40 முதல் 45 இடங்களிலும் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாஜக வேட்பாளர் பட்டியலை இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிட கட்சித் தலைமை முடிவு செய்துள்ளது.