2021 சட்டசபை தேர்தல்களுக்கு பிறகு மேற்கு வங்க மாநிலத்தின் நிதி ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்திற்கு செல்ல வேண்டிய மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை மாநில அரசு தடுப்பதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த திரிணாமுல் காங்கிரஸ், மாநிலத்தில் கிராமப்புற வீட்டுவசதிக்கான மத்திய அரசின் நிதி முடங்கியதைத் தொடர்ந்து, மம்தா அரசாங்கம் இந்த திட்டத்திற்காக சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.இதையும் படியுங்கள் : "ஈரான் கலவரத்துக்கு டிரம்ப்தான் காரணம்"