news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews AIஆல் வெளிவந்த பகீர் உண்மை
tv

Also Watch

tv

Read this

AIஆல் வெளிவந்த பகீர் உண்மை

யமுனா, உத்தரப்பிரதேசம்

22

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சாலையோரத்தில், போர்வையால் சுற்றப்பட்டு முகம் சிதைந்த நிலையில் கிடந்த சடலம். சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். ஏஐ ஆப்பை பயன்படுத்தி உயிரிழந்த பெண் யார் என்பது குறித்து அடையாளம் கண்ட காவலர்கள். அடுத்தடுத்த விசாரணையில் வெளியான பகீர் தகவல். இளம்பெண் உயிரிழந்து கிடந்தது எப்படி? கொலையா? தற்கொலையா? நடந்தது என்ன?

AI மூலம் சடலத்தை அடையாளம் காண முயற்சித்த போலீஸ்
யமுனா ஹைவேஸ்ல பொதுமக்கள் பைக்ல போறதும் வர்றதுமா இருந்துருக்காங்க. அப்ப சாலையோரத்துல போர்வையால சுற்றப்பட்ட நிலையில, முகம் சிதைந்து போய் இளம்பெண்ணோட சடலம் கிடந்துருக்கு. இத பாத்த பொதுமக்கள் போலீஸ்க்கு தகவல் சொல்லிட்டாங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த பார்வையிட்டாங்க. அப்ப முகம் பாதி சிதைந்து போய் இருந்ததால உயிரிழந்த பெண் யாருன்னு அடையாளம் கண்டுபிடிக்குறதுல போலீஸ்க்கு சிக்கல் ஏற்பட்டிருக்கு. சுற்றுவட்டார மக்கள் கிட்டயும் போலீஸ் விசாரிச்சு பார்த்தாங்க. ஆனா அவங்களுக்கு உயிரிழந்த பெண் பத்தி எந்த ஒரு தகவலும் தெரியாதுன்னு சொல்லிட்டாங்க. இதனால சடலத்த புகைப்படம் எடுத்த போலீஸ், அதிநவீன தொழில்நுட்பமான ஏஐ ஆப்ப பயன்படுத்தி, சிதைந்த முகத்த சீர்படுத்தி தெளிவான முகத்த கொண்டு வந்துருக்காங்க.

AI மூலம் கிடைத்த தெளிவான இளம்பெண்ணின் புகைப்படம்
அதுக்கடுத்து அந்த புகைப்படத்த போலீஸ் சுற்றுவட்டார போலீஸ் ஸ்டேஷனுக்கும், பக்கத்து மாநில போலீஸ் ஸ்டேஷனுக்கும் அனுப்பி வச்சுருக்காங்க. அதுல தான் உயிரிழந்தது டெல்லியைச் சேந்த இளம்பெண் சோனாலின்னு தெரியவந்துச்சு. அதுக்கப்புறம் போலீசார் கொலையாளி யாரு, எதற்காக இந்த பெண்ணை கொலை செய்தான்? இவங்களுக்குள்ள அப்படி என்ன பிரச்னை இருக்குன்னு விசாரிச்ச ஆரம்பிச்சாங்க. அதுல தான் பல மர்ம முடிச்சுகள் வெளியாகிருக்கு.

சன்னி என்பவரை காதலித்து வந்த இளம்பெண் சோனாலி

உத்தரபிரதேசத்துல உள்ள யமுனா பகுதியை சேந்த சன்னி-ங்குற இளைஞரும் டெல்லிய சேந்த சோனாலி-ங்குற பெண்ணும் நீண்ட நாட்களா காதலிச்சுட்டு இருந்தாங்க. சன்னி ஒரு தொழிற்சாலையில வேலை பார்த்துட்டு இருந்தாரு. அவருக்கு ஒரு சில பாலியல் கும்பல் கூடவும் தொடர்பு இருக்கு. ஆனா இதபத்தி சோனாலிக்கிட்ட சொல்லாம மறைச்சுருக்காரு சன்னி.

சன்னியிடம் சண்டையிட்டு சென்ற காதலி சோனாலி
சில நாட்களுக்கு முன்னாடி சன்னியும், சோனாலியும் கார்ல போய்ட்டு இருந்தாங்க. அப்ப எதார்த்தமா சன்னியோட ஃபோன வாங்கி சோனாலி யூஸ் பண்ணிட்டு இருந்துருக்காங்க. அப்ப வாட்ஸ்அப்ல சன்னி இன்னொரு பெண் கூட ஆபாசமா பேசியிருந்த மெஸேஜ் இருந்துருக்கு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச சோனாலி, யார் இந்த பெண், எதுக்கு இவ கூட ஆபாசமா பேசி வச்சுருக்கிங்க, என்னைய காதலிச்சுட்டு அவ கூடவும் பழகிட்டு இருக்கிங்க, உங்களதான் நம்பி இருந்தேன், ஆனா உங்களால என் வாழ்க்கைய நாசமா போய்ருச்சுன்னு சொல்லி அழுதுருக்காங்க. இதனால காதலர்களுக்கு இடையில அடிக்கடி பிரச்னை ஏற்பட ஆரம்பிச்சுருக்கு. காதலியோட பேச்ச காதலன் சன்னி கேட்குற மாதிரி இல்ல. அதே மாதிரி சன்னி, சோனாலிய பாலியல் தொழில்லையும் ஈடுபட வைக்க முயற்சி பண்ணிருக்கான். இதனால அதிர்ச்சியடைஞ்ச சோனாலி, உன்ன ரொம்ப நல்லவன்னு நினைச்சேன், ஆனா நீ இப்படி மோசமா நடந்துப்பன்னு நான் நினைச்சு கூட பாக்கல, இனிமே நான் உன்கூட பேசவே மாட்டேன்னு சொல்லி திட்டிருக்காங்க.

சன்னி உள்ளிட்ட 3 பேரை கைது செய்த போலீஸ்
இதனால சோனாலி மேல கொலை வெறியில இருந்த சன்னி, தன்னோட நண்பர்கள் கூட சேந்து அவங்கள கொலை பண்ண திட்டம் போட்ருக்காங்க. அதுபடி சம்பவத்தன்னைக்கு சோனாலிக்கு ஃபோன் பண்ண சன்னி, பாசமா பேசுற மாதிரி நடிச்சு அவங்கள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு கூப்டு போய்ருக்கான். அப்ப அங்க வச்சு ரெண்டு பேருக்கு இடையில மறுபடியும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. அந்த நேரத்துல அங்க வந்த சன்னியோட நண்பர்கள், சோனாலிய கழுத்த நெரிச்சு துடிக்க துடிக்க கொன்னுருக்காங்க. அடுத்து ஒரு கார வாடகைக்கு எடுத்த கும்பல், சடலத்த அதுல தூக்கி போட்டு யமுனை ஆற்றுல தூக்கி வீச திட்டம் போட்ருக்காங்க. அதுபடி அவங்க கார்ல போய்ட்டு இருந்தப்ப, அங்க போலீஸ் செக்கிங் இருந்ததால, சடலத்த சாலையோரத்துல தூக்கி வீசிட்டு அந்த கும்பல் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. தீவிர விசாரணையின் அடிப்படையில இளைஞன் சன்னியவும் மற்ற 2 இளைஞர்கள அரெஸ்ட் பண்ண போலீஸ் மூணு பேரையும் சிறையில அடைச்சுட்டாங்க.

Related Link
டீசலை மனைவி மீது கொப்பளித்து கொடூரம்

டீசலை மனைவி மீது கொப்பளித்து கொடூரம்

          

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரிப்பு

8
44 mins agoshare
இன்றைய தங்கம் விலை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved