Also Watch
Read this
By: Manigandan Raja

ஏணியை தள்ளிச் சென்ற போது விபத்து :
தெலங்கானாவில் இரும்பு ஏணி உயர் அழுத்த மின்கம்பியில் உரசியதில், அதனை கட்டுமான வேலைக்காக தள்ளிச் சென்ற கூலித் தொழிலாளிகள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். கூலித் தொழிலாளர்கள் இருவர் கட்டிட வேலைக்காக சுமார் 20 அடி உயரம் கொண்ட இரும்பு ஏணியை தள்ளிச் சென்றனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக அந்த ஏணி 11 கிலோ வாட் உயர் அழுத்த மின்கம்பி மீது மோதியதில், மின்சாரம் பாய்ந்து கூலித் தொழிலாளிகள் இருவரும் உடல் கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்த போலீசார், மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து மின்சாரத்தை நிறுத்த செய்து இருவரது உடல்களையும் மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved