Also Watch
Read this
Posted on: Jan 28, 2026 11:59 AM
By: Manigandan Raja
மகனை அடித்துக் கொன்ற தாய். இறந்த மகனை பார்த்து ஒரு சொட்டு கண்ணீர் விடாமல் அமைதியாக அமர்ந்திருந்த கொடூரம். பத்து மாதம் சுமந்து பெற்ற தாயே மகனுக்கு எமனாக மாறியது ஏன்? பின்னணி என்ன?
உலக்கையால் அடித்தே...
தெருவுல சிறுமிகள் நிறையபேர் விளையாடிட்டு இருக்காங்க. பெண்கள் சிலர் நடந்து போயிட்டு இருக்காங்க. அப்ப திடீர்னு ஒரு அம்மா, இளைஞரோட தலையில உலக்கையால ஓங்கி அடிச்சிருக்காங்க. அடிச்ச அடியிலேயே அந்த இளைஞர் உயிரிழந்துட்டாரு. அடுத்து, அங்க வந்த போலீஸ் இளைஞரோட சடலத்த போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சிட்டு இளைஞரை கொன்ன அம்மாவ கைது பண்ணி விசாரணை பண்ணிருக்காங்க. அதுல இளைஞர உலக்கையால அடிச்சி கொன்னதே அவரோட அம்மாதான்னு தெரியுது.
மது குடிக்க பணம் கேட்டு தாயிடம் தகராறு
வயதான அம்மாவுக்கு, தான் சம்பாதிச்சு பணம் கொடுக்காம, மது குடிக்கிறதுக்கு காசு கேட்டு, பெத்தவங்கள அடிச்சு உதச்சு துன்புறுத்திட்டு இருந்ததாவும் சொல்லப்படுது. எனக்கு வயசாகிப் போச்சு, இதுக்கு மேல என்னால வேலை பாத்து சம்பாதிக்க முடியாது, குடிப்பழக்கத்த விட்டுட்டு வேலைக்கு போய் நாலு காசு சம்பாதிக்கிற வழிய பாரு, நீ சம்பாதிச்சு எங்களுக்கு கொடுக்க வேண்டும், குறைஞ்சபட்சம் உன்ன நீ பாத்துக்குற அளவுக்கு சம்பாதிச்சா போதும்னு தாய் சங்கரம்மாவும், ஸ்ரீனிவாசன்கிட்ட அட்வைஸ் பண்ணி எவ்வளவோ போராடிருக்காங்க. ஆனா, தாயோட எந்த அறிவுரையும் ஸ்ரீனிவாசன் மனசல மாத்தல.
தாயை அடித்து கொடுமைப்படுத்திய சீனிவாசன்
சங்கரம்மாவை கைது செய்து போலீசார் விசாரணை
இந்த சம்பவத்த பாத்து அந்த வழியா போன மக்களும், அக்கம்பக்கத்துல இருந்தவங்களும் தடுக்குறதுக்காக ஓடி வந்துருக்காங்க. ஆனா, ஸ்ரீவாசனுக்கு தலை பகுதில அதிகபடியான ரத்தம் வெளியேறி சம்பவ இடத்துலேயே உயிரிழந்துட்டாரு. விசாரணையில மொத்த உண்மையும் தெரியவரவே, சங்கரம்மா மேல கொலை வழக்குப்பதிவு பண்ண போலீஸ் அவங்கள அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சிட்டாங்க.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved