எம்பிஏ மாணவியை வீட்டிற்கு அழைத்துச் சென்ற காதலன். மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காதலியின் நெஞ்சில் குத்திக் கொன்ற கொடூரம். பீர் பாட்டிலை வாங்கி வந்து சடலத்துடன் பாலியல் வன்புணர்வு செய்த அரக்கன். வீட்டை பூட்டி விட்டு மும்பைக்கு தப்பிச் சென்ற கொலையாளி. அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் அமர்ந்து மாந்திரிகம் பூஜை செய்து, உயிரிழந்த இளம்பெண்ணின் ஆவியுடன் பேசியதாக பகீர் வாக்குமூலம். காதலி கொடூரமாக கொலை செய்யப்பட்டது ஏன்? ஆவியுடன் பேசியதாக கூறிய காதலனின் பின்னணி என்ன? மகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார்10ம் தேதி, பிறந்தநாள் விழாவுக்கு போன மகள் சோனத்து கிட்ட இருந்து, நான் இனிமே வீட்டுக்கு வரமாட்டேன்னு அவரோட தந்தைக்கு வாட்ஸ்அப்ல ஒரு மெஸேஜ் வந்துருக்கு. இதபாத்து பதறிப்போன தந்தை மகளுக்கு ஃபோன் பண்ணி பாத்துருக்காரு. அப்ப ஃபோன் ஸ்விட்ச் ஆப்ல இருந்துருக்கு. அதுக்கடுத்து மகளோட வருகைக்காக ரொம்ப நேரம் வெயிட் பண்ணி பாத்துருக்காரு தந்தை. ஆனா, மகள் வர்றதுக்கான எந்த ஒரு அறிகுறியும் தெரியல. இதனால அதிர்ச்சியடைஞ்ச தந்தை நிகழ்ச்சி நடந்த இடத்துக்கும், மகளோட ப்ரண்ட்ஸ் வீட்டுக்கும் போய் பாத்துருக்காரு. ஆனா எங்க தேடியும் அவங்கள காணல. இதனால பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ட்டு மகள காணும்ன்னு புகார் அளிச்சுருக்காரு தந்தை. இதுக்கிடையில துவாரகாபுரி பகுதியில இருந்து போலீசுக்கு ஃபோன் ஒன்னு வந்துருக்கு. அப்ப எதிர்முனையில பேசுன ஒருத்தரு, அடுக்கு மாடி குடியிருப்புல உள்ள ஒரு பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுறதா சொல்லிருக்காங்க.காலுறை மூலம் கண்டுபிடித்த போலீஸ்இதனால, உடனே அங்க போன போலீஸ் அந்த வீட்டுக்கதவ உடைச்சுட்டு உள்ளப் போய் பாத்துருக்காங்க. வீட்டுக்குள்ள இளம்பண் ஒருத்தங்க உடல் அழுகுன நிலையில, காலுறையால, கால்கள் கட்டப்பட்டு உயிரிழந்து கிடந்துருக்காங்க. உடல் அழுகி இருந்ததால உயிரிழந்தது யாருன்னு அடையாளம் காணுறதுல போலீஸ்க்கு சிக்கல் ஏற்பட்டிருக்கு. அப்ப மகள காணும்ன்னு புகார் அளிச்ச தந்தைய கூப்டு வந்த போலீஸ் சடலத்த அடையாளம் காட்டிருக்காங்க. அப்ப சடலத்தோட காலுல கட்டியிருந்த காலுறைய பாத்த தந்தை, இந்த காலுறை என் மகளோடது, இந்த காலுறைய நான் தான் என் மகளுக்கு வாங்கிக் கொடுத்தேன்னு சொல்லி கத்திக் கதறி அழுதுருக்காரு. அதுமூலமா உயிரிழந்தது இந்தூர் பகுதியை சேந்த சோனம்ன்னு உறுதி செஞ்ச போலீஸ், கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க விசாரணையில இறங்குனாங்க. அப்ப அந்த வீட்ல வாடகைக்கு இருந்தது மாணவர் பியூஷ்-னு தெரியவந்துருக்கு. அடுத்து அந்த ஏரியாவுல உள்ள எல்லா சிசிடிவி காட்சிகளையும் எடுத்து பாத்துருக்காங்க போலீஸ். அதுல அந்த இளம்பெண் சோனத்த, பியூஷ் தன்னோட ரூம்க்கு அழைச்சுட்டு போன காட்சிகளும் பதிவாகியிருந்துருக்கு. இதனால அவன் தான் கொலையாளின்னு கன்பார்ம் பண்ண போலீஸ், பியூஷோட செல்போன் நம்பர கைப்பற்றி சிக்னல ட்ரேஸ் பண்ணிருக்காங்க. அப்ப சிக்னல் மும்பையில காட்டிருக்கு. உடனே சிக்னல் காட்டுன இடத்துக்கு போன போலீஸ் லாட்ஜ்ல பதுங்கியிருந்த பியூஷ அரெஸ்ட் பண்ணி கிடுக்குப்பிடி விசாரணையில இறங்குனாங்க. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்த போலீஸ்மத்திய பிரதேசத்துல உள்ள இந்தூர் (Indore) பகுதியை சேந்தவன் பியூஷ். இவன் அதே பகுதியில உள்ள காலேஜ்ல எம்பிஏ படிச்சுட்டு இருக்கான். அவனோட வகுப்பு தோழியான சோனமும் நீண்ட நாட்களா காதலிச்சுட்டு இருந்தாங்க. ஆனா இவங்களோட காதலுக்கு சோனத்தோட வீட்ல கடும் எதிர்ப்பு கிளம்பிருக்கு. பியூஷ் குடும்பத்த பத்தி நமக்கு ஒன்னு தெரியாது, அவன் நல்லவனா? கெட்டவனான்னு கூட நமக்கு தெரியாது? அதனால இந்த காதல நீ கைவிட்ரு? நீ படிப்ப முடிச்சதும் உனக்கு நானோ ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு சொல்லிருக்காங்க பெற்றோர்.காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த சோனத்தின் பெற்றோர்பெற்றோரோட பேச்ச கேட்டு ஆரம்பத்துல முரண்டு பிடிச்ச சோனம், அதுக்கடுத்து தந்தை சொன்னத கேட்டு, பியூஷ் கிட்ட பேசுறத கொறச்சுருக்காங்க. இதனால கடும் கோபமான பியூஷ், சோனத்துக்கு ஃபோன் பண்ணி இப்பல்லாம் எதுக்கு முன்னாடி மாதிரி என் கிட்ட பேச மாட்ட-ங்குற, என்ன ஆச்சு உனக்குன்னு கேட்ருக்காரு. அதுக்கு சோனம், எனக்கு உன்ன பிடிக்கல இனிமே எனக்கு ஃபோன் பண்ணாதன்னு சொல்லிட்டு ஃபோன கட் பண்ணிட்டாங்க. இதனால மனம் நொந்து போன பியூஷ் சோனத்துக்கு தொடர்ந்து ஃபோன் பண்ணி பாத்துருக்கான். அப்ப சோனத்தோட நம்பர் பிஸியா இருந்துருக்கு. இதனால கடும் ஆத்திரமடைஞ்ச பியூஷ், சோனம் வேறஒரு இளைஞர் கூட பேசிட்டு இருக்கா, அதனால தான் என்கூட பேசுறத நிறுத்திட்டதா நினைச்சுருக்கான். அதே மாதிரி தனக்கு கிடைக்காத சோனம் வேற யாருக்கும் கிடைக்க கூடாதுன்னு நினைச்சு அவங்கள கொலை பண்ணவும் திட்டம் போட்ருக்கான்.மதுபோதையில் சடலத்துடன் பாலியல் வன்புணர்வுசம்பவத்தன்னைக்கு சோனத்துக்கு ஃபோன் பண்ண பியூஷ் உன்கிட்ட கொஞ்சம் தனியா பேசனும், நீ என்னோட ரூம்க்கு வா, அதுக்கப்புறம் நான் உன்ன டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கான். அதநம்பி சோனமும் வீட்ல பிறந்தநாள் விழாவுக்கு போறதா சொல்லிட்டு பியூஷோட வீட்டுக்கு போய்ருக்காங்க. அப்ப காதல் விவாகரம் தொடர்பா ரெண்டு பேருக்கு இடையில மறுபடியும் பிரச்னை ஏற்பட்டிருக்கு. அப்ப பியூஷ், சோனத்த வலுக்கட்டாயமா பாலியல் வன்கொடுமை பண்ண பாத்துருக்கான். ஆனா சோனம் மறுப்பு தெரிவிச்சதால மறைச்சு வச்சுருந்த கத்திய எடுத்த இளைஞன் இளம்பெண்ண நெஞ்சுலையே குத்திருக்கான். குத்துன வேகத்துல கத்தியே உடைஞ்சு போனதா கூறப்படுது. அடுத்து சோனத்த கழுத்த நெரிச்சு கொன்ன பியூஷ் அங்க கிடந்த கயிற்றால கைய கட்டியும், காலுறையால கால கட்டியும், வாயில துணிய திணிச்சு அமுக்கிருக்கான். அடுத்து மதுபான கடைக்கு போன பியூஷ் ஒரு பீர் பாட்டில்ல வாங்கிட்டு வந்து, சடலத்து பக்கத்துல உட்காந்து மதுக்குடிச்சுட்டு, சடலத்த பாலியல் வன்புணர்வு பண்ணிருக்கான்.சோனத்தின் ஆவியிடம் மன்னிப்பு கேட்டு அழுத பியூஷ்அடுத்து அந்த இளம்பெண்ணோட செல்போன எடுத்த பியூஷ், அவரோட தந்தைக்கு நான் இனிமே வீட்டுக்கு வரமாட்டேன்னு மகள் அனுப்புற மாதிரியே வாட்ஸ் அப்ல மெஸேஜ் அனுப்பிட்டு, சில வீடியோக்கள ஸ்டேட்டஸ் வச்சுட்டு அங்கருந்து மும்பைக்கு தப்பிச்சு போய்ட்டான். அடுத்து மும்பையில ஒரு லாட்ஜ்ல தங்குன பியூஷ், உயிரிழந்தவங்களோட ஆவிய எப்படி நேர்ல வரவைக்கனும்னு சோசியல் மீடியாவுல வீடியோக்கள பாத்துருக்கான். அடுத்து பக்கத்துல உள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு போன பியூஷ் காதலி சோனத்தோட ஆவி கூட பேசனும்-ங்குறதுக்காக ஊதுபத்திய ஏத்தி மாந்திரீக சடங்குகள செஞ்சுருக்கான். அந்த இருட்டுல உட்காந்து சோனத்தோட ஆவிக்கிட்ட தான் செஞ்சது தப்புன்னு சொல்லி அழுது மன்னிப்பு கேட்டதாகவும் கூறப்படுது. விசாரணையோட முடிவுல எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் பியூஷ்ஷ அரெஸ்ட் பண்ணி சிறையில அடைச்சுட்டாங்க. Related Link அடைக்கலம் கொடுத்தவருக்கு நேர்ந்த கதி