Also Watch
Read this
By: Manigandan Raja

தூக்கி வீசப்பட்ட பைக் :
மகாராஷ்டிராவில் சாலையோரம் தோண்டப்பட்ட குழியில் பைக் மீது லாரி மோதி , பைக்குடன் தூக்கி வீசப்பட்டவர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
ஸ்ரீராம் சவுக்கிலிருந்து உல்ஹாஸ்நகர் நோக்கிச் சென்ற டிப்பர் லாரி அதிவேகமாக சென்றபோது, பக்கவாட்டில் சென்ற பைக் மீது மோதியது. இதில், நிலைதடுமாறிய இருசக்கர வாகன ஓட்டி குழாய் பணிக்காக சாலையோரம் தோண்டப்பட்ட ஆழமான குழிக்குள் வீசப்பட்டார். அவரை அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved