Also Watch
Read this
Posted on: Dec 25, 2025 12:48 PM
By: Web Team

பிரதமர் மோடியின் 3வது ஆட்சி காலத்தில் 5 லட்சம் கோடி ரூபாய் அளவில் உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரயில்வே, விமான நிலையம், துறைமுகம் மற்றும் நெடுஞ்சாலை துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தார். அப்போது பக்தோரா, பிடா, வாரணாசி மற்றும் கோடா ஆகிய பகுதிகளில் விமான நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved