குஜராத் மாநிலம் சூரத் அருகே தனியார் விடுதியில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தபட்ட 13 தாய்லாந்து பெண்கள் உட்பட 22 பேரை போலீசார் கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் தனிப்படை போலீசார் ஜஹாங்கிர்புராவில் உள்ள தனியார் ஹோட்டலில் சோதனை செய்தனர். அப்போது அறையில் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த 13 பெண்கள் மற்றும் ஹோட்டல் மேலாளர் உட்பட பணியாளர்கள் என மொத்தமாக 22 பேர் கைது செய்யப்பட்டனர்.