குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் ஊழியரை மர்மநபர்கள் வெட்டியதில் அவர் பலத்த காயமடைந்தார். முத்தாரம்மன் கோவில் செயல் அலுவலக ஓட்டுநராக சண்முகம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் இரவு பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய போது, தலைகவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றனர். இதில் காயமடைந்த சண்முகம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.