Also Watch
Read this
Posted on: Aug 24, 2024 03:44 PM
By: Srini Vasan

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக இயக்குநர் நெல்சனிடம் தனிப்படை போலீசார் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். அவரது மனைவி மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது நெல்சனிடம் விசாரணை நடத்தப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலையில் தேடப்படும் குற்றவாளியான மொட்டை கிருஷ்ணனுடன் போன் மூலம் தொடர்பில் இருந்தததாகவும், மொட்டை கிருஷ்ணனுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறப்பட்ட நிலையில் இயக்குனர் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved