நேற்று முன்தினம் பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்த மூன்று வந்தே பாரத் இரயில் சேவைகள் மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வந்துள்ளதுகடந்த சனிக்கிழமை தென்னக ரயில்வேயில் 2 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகள் மற்றும் மீரா முதல் லக்னோ வரையிலான மூன்று வந்தே பாரத் இரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இன்று அந்த மூன்று வந்தே பாரத் இரயில் சேவைகளும் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.சென்னை எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு நாகர்கோவிலுக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலானது மதியம் 1.50 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட வந்தே பாரத் இரயிலானது தாம்பரம் விழுப்புரம் திருச்சி திண்டுக்கல் மதுரை கோவில்பட்டி திருநெல்வேலி வழியாக நாகர்கோவில் சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மதுரையிலிருந்து இன்று காலை 5.15 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் ரயிலானது திண்டுக்கல் திருச்சி கரூர் நாமக்கல் சேலம் கே ஆர் புரம் வழியாக மதியம் ஒரு மணி அளவில் பெங்களூரு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மீராவில் இருந்து இன்று காலை 6.35 மணிக்கு புறப்பட்ட வந்தே பாரத் இரயிலானது மதியம் 1.45 மணி அளவில் லக்னோ சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று வந்தே பாரத் இரயில் சேவைகளும் முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு இன்று முதல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.