news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home health புரத சத்துக்கள் நிறைந்த ஈசல்..!
tv

Also Watch

tv

Read this

புரத சத்துக்கள் நிறைந்த ஈசல்..!

ஈசல்கள்

60

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
EESAL

நம் வீட்டில், தோட்டத்தில் இப்படி பல இடங்களில் கறையான் புற்று கட்டியிருப்பதைப் பார்த்திருப்போம். அந்தக் கரையானில் இருந்து உருவாகும் இந்த 'ஈசல்கள் ' சின்னப் பசங்க கையில புடிச்சு விளையாடிட்டு இருப்பாங்க.

அதுவும் கொஞ்ச நேரத்துல செத்துபோயிரும். இன்னும் சொல்லப் போனா ஒரு நாள் உயிரி ஈசல்-னு பேப்பர்ல, புத்தகத்துல படிச்சுருப்போமே தவிற இந்த ஈசல்ல என்னென்ன நன்மைகள் இருக்கு என்பது பலருக்கும் தெரியாது.

பல நோய்களுக்கு மருந்தாக பயன்படும் இந்த ஈசல்ல இருக்க கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் ராணி கறையான்கள் இடும் முட்டையிலிருந்து வெளிவரும் இந்த 'ஈசல்கள்' பெரும்பாலும் தாவரங்களையே உண்டு வளர்கின்றன.

"சித்த மருத்துவத்தில்‘இந்திர கோபப் பூச்சி’ என்று அழைக்கப்படும் இந்த ஈசலை பிடித்து உணவுப்பொருள்களுடனோ அல்லது நேரடியாக வறுத்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஈசலில் உள்ள இறக்கைகளை நீக்கி பின்னர் அதனை வெயிலில் உலர்த்தி ஈசலை வறுத்து பொடியாக கூட சாப்பிடலாம் என்கின்றனர். ஈசல் குறித்து ஆய்வு செய்த நிபுணர்கள், வேறு எந்த இறைச்சியிலும் காணப்படாத அளவுக்கு அதிக புரதங்கள், அமினோ அமிலங்கள், வைட்டமின், கால்சியம்,துத்தநாகம், உள்பட பல்வேறு சத்துக்கள் இந்த ஈசல் பொடியில் அடங்கி இருப்பதாக சொல்கிறார்கள்.

மேலும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள்,5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இந்த ஈசல் சிறப்பு உணவாக பரிந்துரைக்கப்படுகிறது. இது தவிர மனிதர்களுக்கு ஏற்படும் புற்றுநோய், உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம் மற்றும், நீரிழிவு பாதிப்பு, இதய பலவீனத்தையும் நீக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் மூட்டுவலி, இளம்பிள்ளை வாதம், பக்கவாதம், முக வாதம் ஆகியவற்றுக்கு எண்ணெயில் ஈசலை காய்ச்சி பயன்படுத்தினால் நல்ல பலன் தரும் என்று சித்த மருத்துவம் கூறுவது குறிப்பிடத்தக்கது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 38 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved