சென்னை அரும்பாக்கத்தில் மூதாட்டி மீது ஸ்கூட்டர் அதிவேகமாக மோதியதன் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. அரும்பாக்கம் ஜெயின் ஜெய் நகரை சேர்ந்த ஜேக்கப், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஸ்கூட்டரை அதிவேகமாக இயக்கினார். அப்போது சாலையோரம் நின்று பேசிக்கொண்டிருந்த மூதாட்டியின் மீது மோதினார். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்