கரூர் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஐந்து இளைஞர்களை, போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்தனர். குளித்தலை பகுதியை சேர்ந்த 17வயது சிறுமி தனது பாட்டி வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த பாலசந்தர், பாலகிருஷ்ணன், சதீஷ், ரங்கநாதன், கரண் ஆகிய 5 பேரும் சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில், குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் ஐவரையும் கைது செய்தனர்.