திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே காதலிக்கு செல்போன் வாங்கி கொடுப்பதற்காக ஒரு பெண்ணை அடித்து கொலை செய்து நகைகளை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்தனர். சூளைமேனியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவரின் நகை,செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்த மர்ம நபர், அவரை கொலையும் செய்து விட்டு அங்கிருந்து தப்பியதாக தெரிகிறது. சரஸ்வதியின் செல்போன் அழைப்புகளை வைத்து விசாரணை செய்த போலீசார், அரும்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவனை கைது செய்தனர். தனது செல்போனுக்கு மாதத்தவணை கட்டுவதற்காகவும், தனது காதலிக்கு புதிய செல்போன் வாங்கி கொடுப்பதற்காகவும் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.