தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியில் செண்டுபூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் கவலை அடைந்த விவசாயிகள், பூக்களை சாலையோரத்தில் கொட்டிச் சென்றனர். தெப்பம்பட்டி சாலையில் உள்ள மலர்சந்தைக்கு கொண்டுச் செல்லப்பட்ட செண்டு பூக்கள் ஒரு கிலோ 10 ரூபாய்க்கு கூட ஏலம் போகாததால், விவசாயிகள் ஏமாற்றமடைந்தனர்.