news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கோயில் தேரோட்டத்தில் உயிரிழந்த தொழிலாளி
tv

Also Watch

tv

Read this

கோயில் தேரோட்டத்தில் உயிரிழந்த தொழிலாளி

தூத்துக்குடி

42

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tut 2(2)

கழுகுமலை கோயில் தேரோட்டத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு தொகையாக 10 லட்சம் ரூபாய் வழங்கவும், அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் காந்தி மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழுகாசலச்மூர்த்தி திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தைப்பூச தேர் திருவிழா நடைபெற்றது. பரம்பரையாக தேர் சக்கரங்களுக்கு சருக்கு கட்டை வைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளி சப்பானிமுத்து தேர் சக்கரங்களுக்கு சருக்கு கட்டை வைக்கும் போது தேர் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனையடுத்து உயிரிழந்த சப்பானிமுத்து குடும்பத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் கோயில் தரப்பில் இழப்பீடாக மூன்று லட்சம் ரூபய் தருவதாக கூறியுள்ளனர் ஆனால் இன்று வரை கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் எந்த இழப்பீடும் வழங்கவில்லை. 

இழப்பீடு தொகையாக ரூ.10 லட்சம் தரக்கோரிக்கை

கோயில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் சப்பானி முத்துவின் இறப்பை மூடி மறைப்பதாகவும், உதாசீனப்படுத்ததாகவும் குமுறிய உறவினர்கள் தமிழக அரசு உடனடியாக சப்பானி முத்துவின் இறப்பிற்கு நியாயமான இழப்பீடு வழங்க கோரிக்கைகள் விடுத்துள்ளனர். உரிய இழப்பீடும் அரசு வேலையும் கிடைக்கும் வரை தமிழக அரசை விடமாட்டோம் எனவும் மேலும் சப்பானிமுத்துவின் குடும்பத்திற்கு கோயில் நிர்வாகமும், தமிழக அரசும் இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்கவும், ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டுமெனவும் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Link
திமுகவிலிருந்து விலகுகிறேன்

திமுக மாநகர அமைப்பாளர் வினோத் அறிவிப்பு

திமுகவிலிருந்து விலகுகிறேன் திமுக மாநகர அமைப்பாளர் வினோத் அறிவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
4 hrs 29 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved