கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் நகை வாங்குவது போல் கடைக்கு வந்த இரண்டு பெண்கள், ஊழியர் அசந்த நேரம் பார்த்து போலி நகையை வைத்துவிட்டு தங்க நகையை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் காந்தி சிலை அருகே உள்ள கடைக்கு கடந்த 6ஆம் தேதி வந்த பெண்கள், கம்மல் வாங்குவது போல் நாடகமாடி, ஏற்கனவே பையில் கொண்டு வந்திருந்த கவரிங் நகைகளை மாற்றி வைத்தனர். இதுகுறித்து கடை உரிமையாளர் புகார் அளித்ததையடுத்து, சிசிடிவி பதிவில் இருந்த அப்பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.இதையும் பாருங்கள் - நூதன நகைத்திருட்டு, கவரிங் நகைகளை வைத்து, தங்கத்தை அபேஸ் செய்த பெண்கள் | Coimbatore | Gold Theft