news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விஜய் முதல்ல உங்க மனைவியோட கண்ணீர துடைங்க...
tv

Also Watch

tv

Read this

விஜய் முதல்ல உங்க மனைவியோட கண்ணீர துடைங்க...

நாகப்பட்டினம்

19

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ntk 2(1)

ஏர் கலப்பையுடன் தொகுதிக்கு வந்த நாதக வேட்பாளர் கார்த்திகாவுக்கு மேளம், தாளம் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்து நாம் தமிழர் கட்சியினர் ஊர்வலமாக அழைத்து சென்றனர். தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீரை துடைக்க துடிக்கிற விஜய்க்கு தன்னுடைய வீட்டில் உள்ள மனைவி பெற்ற பிள்ளைகள் கண்ணீரோட இருக்கிறாங்க அவங்களோட கண்ணீர முதல்ல துடைக்கனும் என்றும் திமுவின் ஜெராக்ஸ் போல் விஜய் அரசியல் செய்வதாகவும் கார்த்திகா காட்டமாக தெரிவித்தார்.

நாதக வேட்பாளர் கார்த்திகா பிரச்சாரம்
கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக மு. கார்த்திகா அறிவிக்கப்பட்டுள்ளார். கோவை மாவட்டத்தை சேர்ந்த அவர் கீழ்வேளூர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று தொகுதிக்கு வருகை தந்த அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

ஏர் கலப்பையை தோளில் சுமந்தபடி
இந்த நிலையில் இன்று கீழ்வேளூர் வந்த வேட்பாளர் கார்த்திகாவிற்கு கட்சி நிர்வாகிகள் மேளம் , தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தில் உள்ள ஏர்கலப்பையை தோளில் சுமந்தபடி வேட்பாளர் கார்த்திகா பொது மக்களிடம் வாக்குகள் சேகரித்தார். மேலும் கீழ்வேளூர் அரசாணி குளம் அருகே நாம் தமிழர் கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

விஜய் உங்க மனைவியின் கண்ணீரை துடைங்க..
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திகா நாம் தமிழர் கட்சி பணத்தை நம்பாமல் நல்ல திட்டங்கள் மூலமாக தேர்தலை சந்திப்பதாக தெரிவித்த அவர் விஜய் தமிழ்நாட்டு பெண்களின் கண்ணீரை துடைப்பதற்கு முன்பாக தனது வீட்டில் உள்ள மனைவி மற்றும் பிள்ளைகளின் கண்ணீரை துடைக்க வேண்டும் என்றவர் இலவசங்களை அறிவித்து திமுகவின் ஜெராக்ஸ் போல் விஜய் அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.

Related Link
சிலிண்டருக்கு மாலை போட்டு அஞ்சலி

சிலிண்டருக்கு மாலை போட்டு அஞ்சலி

               

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திருவல்லீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழா 8 ஆம் நாள்

4
32 mins agoshare
திருவள்ளூர் தங்க குதிரை








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved