மணல் தட்டுப்பாடு எதிரொலியாக ஆந்திராவில் இருந்து மணல் கடத்தி வந்து திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வது அதிகரித்துள்ள நிலையில், போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றில் இருந்து இரவு நேரங்களில் மணல் அள்ளி விற்பனை செய்து வருவதாக கூறப்படும் நிலையில், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.