கலைஞருக்கு மெய்காப்பாளனாக இருந்ததைபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் மெய்க்காப்பாளனாக இருப்பேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக பவள விழாவில் உரையாற்றிய அவர், தனது 60 ஆண்டு கால பொதுவாழ்வு பயணம் முடிந்து விட்டதாகவும், கடைசி காலத்திலாவது நிம்மதியாக இருக்க வேண்டும் என்று தான் மு.க.ஸ்டாலின் கரம் பற்றி வந்துள்ளதாகவும் கூறினார்.