முதுகுளத்தூர் அருகே உள்ள சோனைப்பிரியான் கோட்டை கிராமத்தில் உள்ள சுந்தரராஜமூர்த்தி, பேச்சியம்மன் கோயில் மாசிகளரி திருவிழாவை முன்னிட்டு வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.வடமாடு எருதுகட்டு விழா உற்சாகம்வடமாடு எருதுகட்டு விழாவை முன்னிட்டு சோனைப்பிரியான் கோட்டை கிராம கண்மாய் நடுவில் வடக்கயிறு புதைத்து வடக்கயிற்றின் மறுபுறத்தில் மாடுகள் கட்டப்பட்டு எருது கட்டு நடைபெற்றது. விழாவிற்கு மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 13 காளைகள் கலந்து கொண்டன. ஒவ்வொரு காளையை அடக்க 20 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு, காளைகளை அடக்க 9 வீரர்கள் அடங்கிய மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.அடங்காத 9 காளைகள்பங்கேற்ற 13 காளைகளில் 9 காளைகள் வீரர்களுக்கு அடங்கவில்லை, 4 காளைகள் மாடுபிடி வீரர்களுக்கு அடங்கியது. பிடிபடாத வெற்றி பெற்ற காளைகளுக்கு 15,000 பணம், வெற்றிக் கோப்பைகள், குக்கர்கள் மற்றும் மாடுகளை பிடித்த வீரர்களுக்கும் ரொக்க பரிசுகள், வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது. பாதுகாப்புடன் நடத்தப்பட்ட இந்த எருது கட்டு விழாவை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் ஆர்வமுடன் ரசித்தனர். Related Link ஒரு காடைக்கு ரூ.7 ஆக நிர்ணயம் செய்க...