கூட்டணி குறித்து பேசுகிற அதிகாரம் தமக்கு இல்லை எனவும், நலம் விசாரிக்கவே பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்ததாகவும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறினார். விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் உள்ள ராமதாஸ் இல்லத்தில், அவரை கொங்கு ஈஸ்வரன் சந்தித்தார். திமுக கூட்டணியில் அக்கட்சி அங்கம் வகித்து வரும் நிலையில், இந்த திடீர் சந்திப்பால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமதாஸ் உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தபோது தாம் வெளியூரில் இருந்ததால், தற்போது சந்தித்து நலம் விசாரித்ததாக தெரிவித்தார்.