கோவையில் சாயப்பட்டறைகளின் கழிவு நீர் கலந்து பவானி ஆற்றில் நீரின் நிறம் மாறியது தொடர்பாக ஆய்வு செய்த மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மூன்று சாயப்பட்டறைகளை மூட உத்தரவிட்டனர். சிறுமுகை பகுதியில் இயங்கும் சாயப்பட்டறைகளின் கழிவு நீர் பவானி ஆற்றில் கலப்பதால், ஆற்று நீர் மாசடைந்து வருவதாக புகார் எழுந்த நிலையில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நீரை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். மேலும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த மூன்று சாயப்பட்டறைகளை உடனடியாக மூட உத்தரவு பிறப்பித்தனர்.