கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே இலங்கையனூர் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், அதற்கு பதில் கேட் கீப்பரை நியமிக்க கோரியும் கிராம மக்கள் ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர். சமீபத்தில் செம்மங்குப்பத்தில் நடந்த ரயில் விபத்தை அடுத்து, இலங்கையனூர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ரயில்வே கேட் மூடப்பட்டதால், சுற்றுவட்டார கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்பகுதியில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில், அவ்வாறு அமைக்கப்பட்டால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.