Also Watch
Read this
By: Manigandan Raja

எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட கிராம பெண்கள் :
தமிழகத்தில் பேருந்து வசதிகள் இல்லாத பல்வேறு வழித்தடங்களில் தமிழக அரசு புதிய வழித்தட பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் மட்டும் கடந்த நான்கரை ஆண்டுகளில் சுமார் 10 புதிய வழித்தட பேருந்துகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கோவிந்தராஜன் கொடி அசைத்து துவக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் சென்னை பாடியநல்லூரில் இருந்து அமரம்பேடு, பாஞ்சாலை, சிருவடா வழியாக செல்லக்கூடிய 512 - S என்ற புதிய வழித்தட பேருந்தை எம்எல்ஏ கோவிந்தராஜன் கொடி அசைத்து துவக்கி வைக்க வந்திருந்தபோது அவரை முற்றுகையிட்ட அவரை சூழ்ந்த பெண்கள் சிலர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கீமலூர் பகுதிக்கு மட்டும் என் பேருந்து வசதி இல்லை என கேள்வி எழுப்பிய பெண்கள் பள்ளி கல்லூரி மாணவர்களின் சிரமத்தை சுட்டிக்காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து சேவை தொடக்க நிகழ்வில் சலசலப்பு ஏற்பட்டது.
அப்போது பெண்கள் மத்தியில் பேசிய எம்எல்ஏ கோவிந்தராஜன் சாலை வசதிகளை மேம்படுத்திய பின் பேருந்து வசதி வழங்குவதாகவும், தனது ஆட்சி ஆட்சி காலம் முடிவதற்குள் இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். எம்எல்ஏவின் வாக்குறுதியை அடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்கள் திரும்பி சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved