திருச்செந்தூர் முருகன் கோயிலின் உப கோயிலான வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடிமரத்திற்கு மஞ்சள், பால், தயிர், இளநீர், திருமஞ்சனப்பொடி என 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.