news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 14 வயது சிறுவன் மதுபோதையில் தள்ளாடிய வீடியோ
tv

Also Watch

tv

Read this

14 வயது சிறுவன் மதுபோதையில் தள்ளாடிய வீடியோ

சிங்கம்புணரி, சிவகங்கை

12

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SVG

மதுபோதையில் தள்ளாடிய வீடியோ :

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே 13 வயது மதிக்கத்த ஒரு சிறுவன் போதையில் தள்ளாடி திண்டுக்கல் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாதக தட்டுத்தடுமாறி விழுந்து சென்றது பொதுமக்களிடம் பேசும் பொருளானது.

13 வயது சிறுவன் போதையில் தள்ளாடி சென்ற விவகாரம் பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் மட்டுமின்றி தமிழகத்தையை உலுக்கியது. இந்நிலையில் சிறுவனை பிடித்து போதை தெளிந்தவுடன் விசாரணை செய்தனர்.

விசாரணையில் சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த 14 வயதுடையவர் என்பதும், படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திண்டுக்கல் பகுதியில் வசிக்கும் சொந்த மாமா சேவுகன் (45) வீட்டு வேலைகளில் உதவி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சிங்கம்புணரியில் சிறுவனின் வீட்டில் உள்ள சைக்கிளை எடுத்து செல்வதற்கு வந்த போது உள்ளூர் மதுபான கடையில் இருந்து மதுபானம் வாங்கி அந்த சிறுவனுக்கு   வழங்கியுள்ளார்.

அந்த மதுவை குடித்ததும் போதை தலைக்கு ஏறி சிங்கம்புணரி பகுதியில் அட்ராசிட்டி செய்தது பெரும் பரபரப்பையும் பொதுமக்களயைும், சமூக ஆர்வலர்களையும் வேதனைக்கு உள்ளாக்கியது.

இந்நிலையில் சிறுவனுக்கு மது வழங்கிய சேவுகனை சிங்கம்புணரி காவல்நிலைய காவல் ஆய்வாளர் தயாளன் சேவுகனை கைது செய்து அவர் மீது வழக்குபதிவு செய்து சிங்கம்புணரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு (பிப்-25) வரை நீதிமன்றகாவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் திருப்பத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

சொந்த மாமா மது வாங்கி சிறுவனுக்கு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Link
கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கும்பகோணம் அரசு கலை கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மறுவரையறை இன்றி, மகளிருக்கு ஒதுக்கீடு தேவை - கனிமொழி உரை

10
35 mins agoshare
மக்களவையில் கனிமொழி பேச்சுbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved