வேதாரண்யம் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் கோயில் திருத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரின் வடம் பிடித்து இழுத்து சென்றனர். வேதாரண்யம் வட்டம் திருமறைக்காடு என்னும் வேதாரண்யம் அருள்மிகு யாழைப் பழித்த மொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரண்யசுவரர் தியாகராஜர் சுவாமி ஆலய திருக்கோவில் பெருந்தேர்த்திருவிழா நடைப்பெற்றது. திருமாடா மலகேசா...முன்னதாக விநாயகர் பூஜையுடன் தொடங்கி திருத்தேர்க்கு தேங்காய் உடைத்து தீபாராதனை காண்பித்து பச்சைக்கொடி அசைத்து திருமாடா மலகேசா என்ற முழக்கத்தோடு பக்தர்கள் தேரையை வடம் பிடித்து இழுத்தனர். தேரோட்டமானது நான்கு வீதிகளையும் கடந்து நிறைவுபெற்றது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு ஏராளமான தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதில் 10,000 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு தியாகராஜ சுவாமி அருளைப்பெற்று சென்றனர். Related Link சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா