கடலூர் மாவட்டம் பண்ருட்டி - சேலம் நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி காட்சி வெளியாகி உள்ளது. தட்டாஞ்சாவடி பகுதியில் மடப்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற மணலூர்பேட்டையை சேர்ந்த சிவராமன், டூவீலரில் சாலையைக் கடக்க முயன்ற பண்ருட்டியை சேர்ந்த ராகுல் மீது மோதினார்.