மன்னார்குடி அருகே வாய் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவர் கைது.ஒருவருக்கு காலில் எலும்பு முறிவு. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பால் டெப்போ அருகில் மன்னார்குடி தென்வடல் காகிதப்பட்டரை தெருவை சேர்ந்த ஜெயநாராயணன் (வயது-38) என்பவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நண்பர்களோடு பேசி கொண்டிருந்துள்ளார். அப்போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட வாய்தகராறில் மன்னார்குடி, அரிசிக்கடை சந்து பகுதியை சேர்ந்த நம்பிராஜன் (வயது-30), நெடுவாக்கோட்டை கீழத்தெருவை சேர்ந்த பீர் முகம்மது (வயது-34) ஆகியோர் தாக்கியதில் ஜெயநாராயணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு தஞ்சாவூர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார் மனு மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் நம்பிராஜன் மற்றும் பீர் முகம்மது ஆகியோர் பாமினி ஆற்றங்கரை பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் கைது செய்ய முற்பட்ட போது போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்ற நம்பிராஜ் பாலத்திலிருந்து கீழே குதித்ததில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் கொலை வழக்கின் மற்றொரு குற்றவாளியான பீர் முகம்மது கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு கொலை குற்றவாளிகளை கைது செய்த மன்னார்குடி நகர காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் உதவி முருகன் உள்ளிட்ட காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டியுள்ளார்.