ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையின் 15வது கொண்டை ஊசி வளைவில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால், தமிழ்நாடு - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் அமைந்துள்ள திம்பம் மலைப்பாதை வழியாக, தமிழ்நாடு - கர்நாடகா இடையே நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரிலிருந்து சத்தியமங்கலம் நோக்கி பாரம் ஏற்றி வந்த லாரி, 15வது கொண்டை ஊசி வளைவில் திரும்பிய போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இதனால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து தடைப்பட்டது.