news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஓட்டுநர் பயிற்சியின் போது நிகழ்ந்த துயரம்
tv

Also Watch

tv

Read this

ஓட்டுநர் பயிற்சியின் போது நிகழ்ந்த துயரம்

மதுரை

226

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mdu 2(11)

மேலூர் அருகே ஓட்டுநர் பயிற்சி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் பயிற்றுநர் உயிரிழந்த நிலையில், 6 பேர் காயமடைந்தனர். காளாப்பூரை சேர்ந்தவர் ரத்தினம் (80), இவர் தனது உறவினருடன் இணைந்து காளாப்பூர் மற்றும் சிங்கம்புணரியில் தனியார் வாகன ஓட்டுநர் பயிற்சி பள்ளி நடத்தி வருகின்றார்.

ஓட்டுநர் பயிற்சியின் போது துயரம்
இந்நிலையில், ஓட்டுநர் பயிற்சி பெற்று வரும் 7க்கும் மேற்பட்டவர்களுடன், ரத்தினம் கொட்டாம்பட்டி புறவழிச் சாலையில் காரில் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த நிலையில், அப்பகுதியில் உள்ள யூ-டர்ன் சாலையில் திரும்பும் போது, மதுரை நோக்கி வந்துக் கொண்டிருந்த இன்னோவா கார் மோதி விபத்துக்குள்ளானது.

பயிற்றுநர் ரத்தினம் சம்பவ இடத்திலேயே பலி
இதில், தலை மற்றும் மார்பு பகுதியில் பலத்த காயமடைந்த பயிற்றுநர் ரத்தினம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பயிற்சி வாகனத்தில் இருந்த தெக்கூரைச் சேர்ந்த ஜெயகண்ணன் (40), கோவில்பட்டியைச் சேர்ந்த அரவிந்தன் (18), சிங்கமங்களப்பட்டியை சேர்ந்த தனபால் (24), வையாபுரிப்பட்டியைச் சேர்ந்த மணிமாறன் (50) உள்ளிட்ட 6 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மேலூர் மற்றும் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து போலீசார் விசாரணை
மேலும், இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கொட்டாம்பட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

Related Link
3 சிறுமிகளுக்கு பா*யல் வன்கொடுமை

3 சிறுமிகளுக்கு பா*யல் வன்கொடுமை

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
13 hrs 49 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved