நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலையில், ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்து கொட்டக்கூடிய பிரசித்திபெற்ற அகஸ்தியர் அருவிக்கு, சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன், குடும்பம் குடும்பமாக, அகஸ்தியர் அருவிக்கு வருகை தந்து குளித்து மகிழ்ந்தனர். முன்னதாக, பாபநாசம் வன சோதனைச் சாவடியில், சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு வந்துள்ளார்களா? என வனத்துறையினர் சோதனை செய்து, சோப்பு, ஷாம்பு, மது பாட்டில் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து, அனுப்பி வைத்தனர்.