திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் : கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமான அளவில் கொட்டி வருகிறது. இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் உள்ளூர், மற்றும் கேரளா, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் திற்பரப்பு அருவியில் குவிந்து வருகின்றனர். அருவியில் அனைத்து பகுதிகளிலும் மிதமான தண்ணீர் கொட்டி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இங்கு குடும்பம் குடும்பமாகவும் நண்பர்களுடனும் குவிந்துள்ள சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் அருவியில் குளித்து மகிழ்ந்தும் இயற்கை அழகை பார்த்து ரசித்தும் அருவியின் அழகை புகைப்படங்கள் எடுத்தும் செல்ஃபி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்து செல்கின்றனர். அதுபோன்று அருவியில் உள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்களுடன் நீராடியும் மகிழ்ந்து செல்கின்றனர். மேலும் அருவியின் மேற்பகுதியில் கோதையாற்றில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா படகு துறைக்கும் சென்று படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்கின்றனர். Related Link பின்னால் வந்த வாகனம் மோதி கட்டுப்பாட்டை இழந்த கார்