தூத்துக்குடியில் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிதவை கப்பலில் பராமரிப்பு பணியின் போது, விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். முக்தா இன்ஃப்ரா என்ற நிறுவனத்திற்கு சொந்தமான மிதவை கப்பலில், ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்திப்குமார், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜெனிசன் தாமஸ், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சாரோன் ஜார்ஜ் ஆகிய மூன்று பேரும் பராமரிப்பு பணி மேற்கொண்டனர். அப்போது, எதிர்பாராத விதமாக விஷவாயு தாக்கியதில் அவர்கள் மூன்று பேரும் மூச்சு திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.இதையும் படியுங்கள் : காதலியை மிரட்ட நினைத்த காதலன் தூக்கில் தொங்கிய போது விபரீதம்